#சற்றுமுன் | கணவர் வெளியிட்ட வீடியோ : பதவியை ராஜினாமா செய்த திமுக துணை பொதுச்செயலாளர்!
DMK Subbulakshmi
திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "2009 இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றவதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்.
தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின், அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.
2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று. தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று. அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு. அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும். கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்" என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரின் பதிவு விலகுவதற்கு அரசியல் வட்டாரத்தில் வேறு காரணம் சொல்லப்படுகிறது. இதுகுறித்த தகவலின்படி, கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி, குறைவான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இதற்க்கு அமைச்சர் முத்துசாமி தான் காரணம் என்று, சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசன் சமூகவலைதளங்களில் காணொளி வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பவே, திமுகவின் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகவும், எனவே திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி விலக முடிவு எடுத்திருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.