ரிசல்ட்டே வரல! இனிப்புகளை வழங்கி கொண்டாடிய கொண்டாடிய திமுக தொண்டர்கள்! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார். அதனை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்ததது. அதன்படி, வாக்குப்பதிவு கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா உட்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஒன்பதாவது சுற்று வாக்குகள் எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. ஒன்பதாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 57,483 வாக்குகளும் பாமக வேட்பாளர் சி. அன்புமணி 24,130 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனை அடுத்து வாங்க எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் தொகுதியில் ஆங்காங்கே திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி பகுதிகளில் திமுகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

வாக்கு வித்தியாசம் அதிக அளவில் உள்ளதால் திமுக வேட்பாளர் வெற்றி உறுதியாக விட்டது என்று திமுகவினர் நினைத்துக் கொண்டு, பல்வேறு பகுதிகளில் இனிப்புகளை வழங்கி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK volunteers celebrated by giving sweets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->