ஆசைக்கு இணங்காததால் பதவி பறிப்பு! திமுக மா.செ மீது மகளிர் அணி நிர்வாகி புகார்!! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மேற்கு திமுக மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன் மீது திமுகவை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகி தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாகவும் அதற்கு ஒத்துக் கொள்ளாததால் தனது கட்சி பதவியை பரித்துள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை குறிப்பிட்டு பேசியுள்ள அவர் திருத்தணி ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியதாகவும், திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளராக 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தலைமை கழகம் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டம் இடைத்தேர்தல் ஆகியவற்றில் மகளிர் அணி அழைத்துச் சென்று பணியாற்றியுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் பேசியுள்ள அவர் "எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக அறிவித்த பல்வேறு போராட்டங்களில் தனது தலைமை ஏற்று பல்வேறு போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை நடத்திய என்னை ஆளுங்கட்சியாக திமுக வந்த பிறகு திருவள்ளூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பதவியில் இருந்து தன்னை மாற்றிவிட்டனர். தமிழக முழுவதும் உள்ள திமுக மகளிர் அணியில் பெரும் மாற்றமில்லாமல் ஒரு சிலர் மட்டுமே மாற்றப்பட்டுள்ள நிலையில் அதில் நானும் இடம் பெற்றுள்ளேன்.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்களிடம் கேட்டு பாருங்கள், நான் கட்சிக்காக வேலை செய்யவில்லையா? உழைக்கவில்லையா? நான் கட்சியில் ஏதாவது தவறு செய்தேனா.? கட்சி வேலை மட்டுமே என் உயிர் மூச்சு என வேலை செய்து வரும் என்னை மாற்றியுள்ளனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான சந்திரன் கூறிய ஒரு செயலை நான் செய்யாததால் மாற்றப்பட்டுள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் என்னிடம் தகாத முறையில் இருக்க ஆசைப்பட்டார். அதேபோன்று மகளிர் அணியை சேர்ந்த பெண்களிடம் அவருடைய செல்போன் நம்பரை கொடுத்து பேச சொன்னார். அவர்களை எல்லாம் என்னுடைய ஆசைக்கு இணங்கவை என சொன்னார். நீயும் ஆசைக்கு இணங்க வேண்டும் என சொன்னார்.

இது போன்ற கேவலமான பிழைப்பை நான் பிழைக்க மாட்டேன் என சொன்னேன். நாங்கள் நல்ல குடும்பத்தில் இருந்து கழகத்திற்காக பணியாற்ற வந்துள்ளோம். கழகத்திற்கு வரும் பெண்கள் அனைவரும் இவ்வாறு இருப்பார்கள் என நினைக்க முடியுமா? கழகத்தில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இடத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர் மகளிர் அணிக்கு இது போன்ற அச்சுறுத்தல் ஏற்படுத்தலாமா? 

இதை நான் தலைவரிடம் கொண்டு போய் சொல்வேன் என கூறியதற்கு கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்தும் நீக்கி உன்னை ஒழித்து விடுவேன் என மிரட்டினார். திமுக தலைவரை சந்திக்க அறிவாலயம் சென்றபோது அவரை பார்க்க முடியாததால் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் இது குறித்தான புகார் கடிதம் அளித்துவிட்டு வந்தேன். 

ஆனால் 2ம் கட்ட தலைவர்கள் யாரும் அவரிடம் எதுவும் விசாரிக்கவில்லை என தெரிகிறது. மறுநாள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பதவியில் இருந்து என் பெயர் மாற்றப்பட்டு செய்தி வெளியானது. அவருடைய ஆசை கிணங்காததால் என்னை பதவியில் இருந்து நீக்கி உள்ளார். திமுக உறுப்பினராக இல்லாதவர்களுக்கு எல்லாம் பணம் வாங்கிக்கொண்டு பதவி வழங்கிக் கொண்டிருக்கிறார். தலைவர் கவனத்திற்கு செல்லும் வரை இந்த வீடியோவை நான் பதிவிட்டு கொண்டே இருப்பேன். இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதால் என்னை மிரட்டுவார், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவார். எனவே தலைவர் உரிய விசாரணை நடத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த காணொளியில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK women wing admin harassment complaint against DMK MLA Chandran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->