நாசகார நிறுவனத்திற்கு திமுகவின் இரு அமைச்சர்கள் ஆதரவு! அம்பலப்படுத்திய அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!
Dr Anbumani Ramadoss Say About DMK Ministers support to NLC
நாகையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "என்எல்சி விவகாரத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி உள்ளோம். இந்த போராட்டத்தை பொருத்தவரை அந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு திமுக அமைச்சர்களும் என்எல்சி நிர்வாகத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் தேர்தலுக்கு முன்பு என்எல்சியை எதிர்த்து போராட்டம் செய்தார்கள். தற்போது ஆளுங்கட்சியாக வந்ததும் என்எல்சி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிர்வாகம் மக்களையும், சுற்றுச்சூழலையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. விவசாயத்தை அழித்துவிட்டு, அந்த மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்குவதில்லை.
இப்படிப்பட்ட ஒரு நாசக்கார என்எல்சி நிர்வாகத்திற்கு அதே மாவட்டத்தை சேர்ந்த இரண்டு திமுக அமைச்சர்கள் ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய தேர்தல் வாக்குறுதி என்ன வென்றால், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற சட்டத்தை கொண்டு வந்த கொண்டு வருவோம் என்றார்கள், ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் அந்த சட்டத்தை கொண்டு வரவில்லை.
ஓசூர் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சும்மர் 500 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை தொடங்க உள்ளது. கிட்டத்தட்ட 18000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 2400 பேர்கள் தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
அதே நேரத்தில் ஜார்கண்டில் இருந்து 6000 பேருக்கு வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, அந்த மாநிலத்தை சார்ந்த அமைச்சரே சொல்லி இருக்கிறார். இப்படியாக தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோய் கொண்டிருக்கிறது" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About DMK Ministers support to NLC