மத்திய அரசின் அறிவிப்பு : பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


60 வயதுக்குட்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி வரவேற்கத்தக்கது: மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் 18 -59 வயதுப் பிரிவினருக்கு ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ்  கொரோனா தடுப்பூசி இலவசமாக  போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

இந்தியாவில் 18-59 வயதுப் பிரிவில் உள்ள 77 கோடி பேரில் 70 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில்,  அவர்களில் ஒரே ஒரு விழுக்காட்டினர், அதாவது 72 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் போட்டுள்ளனர். இதற்கு காரணம் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படாதது தான்!

பூஸ்டர் தவணை தடுப்பூசியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். இப்போது எனது யோசனை செயல்வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் பயன்படுத்தி இந்த வயதுப் பிரிவினர் பூஸ்டர் டோஸ்  தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்!

அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக வரும் 17-ஆம் தேதி முதல் 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும், கிராமப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Wish To CentralGovt Announce Vaccine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->