அரைவேக்காடு ரொட்டியும் ஆங்கிலேயர்களும் - மருத்துவர் இராமதாஸ் முகநூல் பதிவு.! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் சுவாரசியமான சில பதிவுகளை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று "அரைவேக்காடு ரொட்டியும் ஆங்கிலேயர்களும்" என்ற தலைப்பில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், 

அரைவேக்காடு ரொட்டியும் ஆங்கிலேயர்களும்!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஒரு சமயம் இங்கிலாந்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

 அந்த நிகழ்ச்சியில் ஆங்கிலேயர் ஒருவர் கூட்டத்தின் மத்தியில் உரையாட தொடங்கினார். பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர், “இறைவனுக்கு ஆங்கிலேயர்கள் மீது தான் அன்பு அதிகம். அதனால் தான் மிகவும் ரசித்து அழகாக, வெண்மையாக எங்களை படைத்திருக்கிறார். அதனால் தான் நாங்கள் வெண்மை நிறத்தில் இருக்கிறோம்” என்று தற்பெருமையோடு பேசி முடித்தார்.

அந்த ஆங்கிலேயர் பேசி முடித்ததும் டாக்டர் ராதாகிருஷ்ணன், அந்தக் கூட்டத்திற்கு இடையே உரையாட தொடங்கினார். அப்பொழுது அவர் ஒரு குட்டி கதையை சொல்ல ஆரம்பித்தார்.

“இறைவன் ஒரு நாள் ரொட்டி சுட ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் இறங்கினார். முதல் ரொட்டியை சுட்டார். ஆனால் அது சரியாக வேகவில்லை. அதனாலே சில பேர் வெள்ளையாய் பிறந்தார்கள்.


இரண்டாவதாக ஒரு ரொட்டியை சுட்டார். அது அதிக நேரம் சுடு பட்டதால் கருகிப் போனது. அதனால் சில பேர் கருப்பாய் பிறந்தார்கள்.

இறைவன் இப்படி இரண்டு மூன்று தடவை அனுபவத்திற்கு பின்னர், மூன்றாவது ரொட்டியை மிக சரியான பக்குவத்தில் தயார் செய்தார். அது அரை வேக்காடாகவுமில்லாமல், கரிஞ்சும் போகாமல் சரியான பக்குவத்தில் தயாரானது. அதன் காரணமாகவே இந்தியர்களாகிய நாங்கள் கருப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாமல் சரியான நிறத்தில் பிறந்திருக்கிறோம்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். 
 
இதை கேட்டதும் அக்கூட்டத்தில் உள்ள அனைவரும் கலகலவென்று சிரிக்கத் தொடங்கினார்கள். முதலில் பேசிய ஆங்கிலேயருக்கு வெட்கமாய் போனது.

( நண்பர் ஒருவர்  எனக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பிய தகவல்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss FB Post 5 july


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->