வேங்கைப் புலியனிடம் உடல் நலம் விசாரித்த மருத்துவர் இராமதாஸ்.! உருக்கமான காணொளி.! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், "அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த காட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. செயல்வீரர் வேங்கைப்புலியனை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆசிரியராக பணியாற்றியவர். 

வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து  சங்கத்திற்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர். மேடையில் அவர் முழங்கினால் அதிரும். அவரது மகள் அறிவுக்கொடி.  குழந்தைப் பருவத்திலிருந்து மேடைகளில் முழங்கி வரும் பெண். எங்கள் அனைவரின் அன்புக்கும் உரியவர்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய வேங்கைப்புலியனை வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோரை அனுப்பி நலம் விசாரிக்கச் செய்தேன். வழக்கறிஞர் பாலுவின் தொலைபேசி வழியாக அவரிடம் நான் பேசினேன்.

முதுமை காரணமாக வேங்கைப் புலியனுக்கு நினைவுகள் தவறி விட்ட நிலையில், யாரையும் அடையாளம் காண முடியவில்லை. எந்தக் கேள்விக்கும் பதில் கூற முடியவில்லை. 

அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நான், ‘ வேங்கைப்புலியன் நலமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டவுடன் அதை ஆமோதிக்கும் வகையில் வேங்கைப்புலியனிடமிருந்து ஓசை வந்தது. உடல் நலம் பாதித்த பிறகு அவரிடமிருந்து அத்தகைய பதில் வருவது இதுவே முதல் முறை என்று அவரது குடும்பத்தினர்  கூறினார்கள். அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் பேசினேன்.

வேங்கைப்புலியனிடம் பேசிய உடன்  அவர் என்னை அழைத்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடத்திய கட்சி நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன. அவர் உடல் நலம் பெற்று வர வேண்டும். பா.ம.க. மேடைகளில் எனது முன்னிலையில் மீண்டும் முழங்க வேண்டும்"

இவ்வாறு அந்த பதிவில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss FB Post Vengai puliyan health


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->