விமானப்படை குரூப்கேப்டன் வருண்சிங் மறைவுக்கு., மருத்துவர் இராமதாஸ் இரங்கல்.!
Dr Ramadoss Mourning to varun singh
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் கிராம பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நேற்று நடைபெற்றது. இதில், இந்திய ராணுவப் படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த விமானி வருண் சிங்கை விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்டு வரும் போது வரும் பொழுது அவருக்கு 80 - 85 சதவீத தீக்காயங்கள் இருந்ததாக மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை மோசமாக இருந்தாலும், அவரின் உடல் பாகங்கள் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து, குரூப் கேப்டன் விமானி வருண் சிங்கை உயர் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், இன்று குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு, குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 80% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமானப்படை குரூப்கேப்டன் வருண்சிங் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Mourning to varun singh