டெங்குவையே ஒழிக்க முடியல! இவங்க சனாதனத்தை ஒழிக்க போறாங்களா? - ரவுண்டு கட்டிய Dr.தமிழிசை! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டையில் கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் திருக்கோயில் ஒரே அத்தி மரத்தில் 14 அடியில் விஸ்வ ரூபத்தில் சீனிவாச பெருமாள் காட்சியளித்து வருகிறார். இந்த கோயிலுக்கு தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று சிறப்பு தரிசனம் செய்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் விஞ்ஞானத்துக்கே வழிகாட்டியது மெய்ஞானம், 9 கோள்கள் இருப்பதாக கண்டறிந்ததற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் நவக்கிரகங்கள் வழிபட்டுள்ளனர்.

ஆன்மீகத்தை பாதுகாக்க வேண்டும், ஆனால் ஆன்மீக ரீதியான எதிர் கருத்துக்கள் தமிழகத்தில் அதிகம் பரப்பப்படுகிறது. பெரும்பான்மை மக்களின் உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ளும் மத வழிபாட்டை தமிழகத்தில் தொடர்ந்து நிந்தித்து, உதாசீனப்படுத்தி வருகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்று சொல்பவர்கள் தமிழக அரசுக்கு எதிராக ஏதேனும் பதிவிட்டால் கைது செய்கின்றனர்.

கருத்து சுதந்திரம் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இந்து மதத்தைப் பற்றியும், ஆன்மீகத்தைப் பற்றியும், சனாதனத்தைப் பற்றியும் தவறான கருத்துக்கள் தான் பரப்பப்படுகிறது. சனாதனம் என்பது வாழ்க்கை முறை. அதனை டெங்குவைப் போல் ஒழிப்போம் என்று சொல்பவர்களால் ஏன் டெங்குவை ஒழிக்கமுடியவில்லை. மற்ற மதங்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றி விமர்சிப்பார்களா? தமிழகத்தில் பல குடமுழுக்குகளை நடத்தியதாக சொல்லும் தமிழக முதல்வர், அதில் ஒன்றில் கூட பங்கேற்கவில்லை" என திமுகவையும் அதன் தலைவர் முக ஸ்டாலினையும் விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Tamilisai criticized DMK MKStalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->