#சற்றுமுன் || பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, குரங்குசாவடி பகுதியில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், "இன்றுவரை சேலம் மாநகராட்சிக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சியாக மாறியது. சேலத்துக்கு ஒரு பெருமை என்னவென்றால் தமிழ்நாட்டில் மூன்றாவது நகராட்சி இது.

முதல் நகராட்சி சென்னை, இரண்டாவது நகராட்சி கோவை ,மூன்றாவது நகராட்சி சேலம். அப்படிப்பட்ட சேலத்தில் தான், ராஜாஜி அவர்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.

சேலம் என்றாலே மாம்பழம் தான்., அப்படிப்பட்ட சேலம் மாநகராட்சியில் சாக்கடைகள் ஆக உள்ளது. 40 ஆண்டுகளுக்கும் முன்பாக பார்த்த சாக்கடைகள் இன்றுவரை அது அப்படியேதான் உள்ளது.

சேலத்தில் நடுப்பகுதியில் திருமணிமுத்தாறு என்ற அழகான ஒரு இருந்தது. அந்த ஆற்றில் தான் தண்ணீர் குடித்தார்கள்., கோவிலில் பூஜை நடத்தினார்கள். ஆனால், இன்று அது சாக்கடையாக சென்று கொண்டிருக்கிறது. அந்த ஆற்றில் பன்றிகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. 

சேலத்தில் கொசுத்தொல்லை அவ்வளவு மோசமாக உள்ளது. 50 ஆண்டுகாலம் இந்த தமிழகத்தை ஆண்ட இரண்டு கட்சிகளாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. 2 மேம்பாலங்கள் மட்டுமே சேலத்தில் உள்ளது. அதுவும் சேலம் நகரத்துக்குள் மட்டும் தான் உள்ளன. நான் இன்று சொல்கிறேன் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்., அந்த இரண்டு மேம்பாலங்கள் இன்னும் 15 வருடங்களில் இடிக்க வேண்டிய சூழல் வரும். அந்த இரண்டு மேம்பாலங்கள் தான் போக்குவரத்து நெரிசலில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்.

திட்டமிடாத தெரியாத இந்த இரண்டு கட்சிகளும் மாற்றி மாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற சூழல் தான் இதற்கு காரணம்.

சேலத்தில் பனைமரத்துப்பட்டி ஏரி ஒன்று உண்டு, 900 ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த ஏரியில் ஒன்றை டிஎம்சி கொள்ளளவு தண்ணீர் சேமிக்கலாம்.  மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முதலில் அங்கு கொண்டு வந்திருக்கவேண்டும். 

நாங்கள் இருபது வருஷமாக இதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். மேட்டூர் அணையில் இருந்து ஒரு ஆண்டுக்கு 50 முதல் 125 டிஎம்சி நீர் வீணாக கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஐந்து டிஎம்சி தண்ணீரை சேலம் மாவட்டத்திற்கு திருப்பிவிட வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். அதற்காகத்தான் நாங்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் அந்த திட்டம் அவரின் ஊருக்கு மட்டும் எடுத்து சென்று போய்விட்டார்" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrAnbumaniRamadoss Pressmeet in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->