அன்று கருப்பு சட்டை போராட்டம்.. இன்று மது விற்பனை அதிகரிக்க திட்டம்.. திமுக அரசை சாடிய டாக்டர்.கிருஷ்ணசாமி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மற்றும் சட்டவிரோத பார்களை ஒழித்திட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி நடத்தினார்.

தமிழகத்தில் உள்ள சட்டபூர்வ 5500 டாஸ்மாக் கடைகளையும், அந்த டாஸ்மாக் கடைகளை சுற்றியுள்ள சட்டவிரோதமாக நடைபெறும் 5 முதல் 10 சட்டவிரோத பார்களையும் நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி இந்த பேரணியானது நடைபெற்றது. சட்டவிரோதமாக நடைபெறும் பார்கள் மூலம் 50 முதல் 100 கோடி ரூபாய் தினம் தோறும் அரசியல் அதிகாரம் மிக்க அவர்களின் தனிப்பட்ட கஜானாவுக்கு செல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் சட்டவிராத பார்கள் அனைத்தையும் மூடவும் வலியுறுத்தி 100 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த புதிய தமிழகம் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன் துவக்கமாக இன்று காலை 11 மணியளவில் சென்னை பனகல் மாளிகை முன்பு தொடங்கிய பேரணையானது சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்றுள்ளது.

இந்த பேரணியின் முடிவில் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பேரணி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது "இந்த பேரணியில் பல்வேறு கட்சியின் நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதன் பிறகு மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நம்புகிறேன். 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி வருவதற்கு முன்பு மு.க ஸ்டாலின், அவருடைய சகோதரி கனிமொழி, அவருடைய மகன் உதயநிதி ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு மதுவிலக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு மது விற்பனை பரவலாக்க கூடிய வகையில் செயல்படுகிறார்களே தவிர மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் இன்னும் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை போராட்டத்திற்கான எச்சரிக்கையாகவே இந்த பேரணியை நடத்தியுள்ளோம்.  இன்று பிற்பகல் 1:30 மணி அளவில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து 250 பக்கங்கள் கொண்ட மனுவை அளிக்க உள்ளோம்." என டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrKrishnasamy alleges TNgovt is increasing alcohol sale


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->