ஆயிரத்தைக் கடந்த  அறப்பணி... எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை., மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் புதிய முயற்சி ஒன்றை தொடங்கி, அதில் முதல் வெற்றியையும் கண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது, "மரம் நடும் அறமே மாபெரும் அறம் என்பதற்கிணங்க பாட்டாளிகள் அனைவரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகளை நட்டு வருகிறீர்கள். 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நேற்று வரையிலான 15 நாட்களில் மொத்தம் 158பாட்டாளிகள் மரக்கன்றுகளை நட்டு, என்னிடம் வாழ்த்துகளைப் பெற்றிருக்கிறார்கள். 

வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி தான் புத்தாண்டில் முதல் மரக்கன்றை நட்டு நடப்பாண்டிற்கான மரம் நடும் அறப்பணியை தொடங்கி வைத்தவர்.
அடுத்த 15 நாட்களில் 158 பாட்டாளிகள் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர். 

கடந்த 15 நாட்களில் மட்டும் மூன்று பேர்  தலா 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இது  இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 32 நாட்களில் நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்; மரக்கன்று நட்டவர்களின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட இணையானதாகும். 

கடந்த 15 நாட்களில் ஒற்றை மரக்கன்றை நட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஒரு சிலர் மட்டும் தான் ஒற்றை இலக்கத்தில் மரக்கன்று நட்டனர். பெரும்பான்மையானவர்கள் பத்துக்கும் கூடுதலான மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த நவம்பர் 30-ஆம் நாளில் இந்த பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.  அன்று முதல்  31.12.2021  வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் 186 பாட்டாளிகள் தங்களின் பிறந்தநாளில் மரக்கன்று நட்டு என்னிடம் வாழ்த்து பெற்றனர். 

சிலர் ஒரு மரக்கன்று நட்டனர்... பலர் பத்து மரக்கன்றுகளை நட்டார்கள். சிலர் ஐம்பது மரக்கன்றுகள் வரை நட்டார்கள். அவை அனைத்தையும் சேர்த்து திசம்பர் 31 வரை 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஜனவரி 15-ஆம் தேதி வரை நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து விட்டது. 

இந்த புள்ளிவிவரங்களை தேடித்தேடி கணக்கிட்ட போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த நம்மால் முடிந்த சிறிய முயற்சி இது. இது  பெரும் காடாக மாறும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பணியைத்  தொடருவோம்! மரம் நடும் அறமே மாபெரும் அறம்!" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Say About Plant Tree


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->