உதயநிதியுடன் கைகோர்க்க போகிறாரா அழகிரி மகன்.? செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி.! - Seithipunal
Seithipunal


சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருக்கும் தன்னுடைய ஆதரவாளர்களின் மூலமாக தன் பலத்தை காட்ட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி முயற்சித்தார். தேர்தல் நடைபெற்ற திமுக வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதலமைச்சரான பின்பு அரசியல் நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் முழுவதுமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

ஆனால் தன்னிடம் ஆதரவு தேடி வருபவர்களுக்கு உதவி செய்வது மற்றும் அவர்களது இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற செயல்களை தவறாமல் செய்து வருகின்றார். மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவராக இசக்கி முத்து இருந்தார். இவர் மு.க அழகிரியின் தீவிர ஆதரவாளர். இவர் தற்போது உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரை காண நேற்று காலை மு.க. அழகிரி இசக்கி முத்துவின் வீட்டிற்கு சென்றார். அவரிடம் நலம் விசாரித்த பின்பு அவருக்கு தேவையான மருத்துவ செலவுக்கான பணத்தை வழங்கினார். அப்போது அவருடன் நிறைய ஆதரவாளர்கள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேச வந்தார்.

அப்பொழுது செய்தியாளர்கள் அவரைப் பார்த்து, 'துரை தயாநிதியும், உதயநிதியும் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தில் செயல்படுவார்களா? நீங்கள் தீவிர அரசியலில் மீண்டும் இறங்கும் எண்ணம் இருக்கிறதா?' என்று கேள்விகளை எழுப்பினர். 

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர் சென்று விட்டார். சமீப காலமாக உதயநிதியும் துரை தயாநிதியும் இணைந்து செயல்பட போவதாக சில தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால் இதில் மு க அழகிரிக்கு விருப்பமில்லை என்று திமுகவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Durai Dhayanithi may join with Udhayanithi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->