குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர்! நீதிபதிகளுக்கே புரியல! விளாசிய துரை வைகோ!
Durai Vaiko wants to repeal three criminal laws against common people
சாமானியர்களுக்கு எதிரான மூன்று குற்றவியல் சட்டங்களை நீக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த ஜூலை 1ஆம் தேதி மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நீதி அமைப்பை சரி செய்யும் நோக்கமாக கொண்டு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது. புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
புதியதாக அமல்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் டெல்லி ஜெந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மதிமுக சார்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி கலந்து கொண்டார்.
போராட்டக் களத்தில் துரை வைகோ பேசியதாவது, பழைய சட்டங்களை மாற்றி புதிய சட்டங்கள் ஏற்றுவதில் ஏமாற்றமும் குழப்பமும் தான் மிஞ்சுகிறது. ஹிந்தியில் பெயர்களை மாற்றி இருக்கிறார்கள் இந்த சட்டங்களின் பெயர்களின் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் சட்ட வல்லுநர்களுக்குமே உச்சரிப்பதற்கு சிரமப்படும் போது சாமானியர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் தொடர்ந்து பேசிய துரை வைகோ, மூன்று புதிய சட்டங்களிலும் பழைய சரத்துகலே 95 சதவீதம் உள்ளது. சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும், சாமானர்களின், உரிமைக் குரலுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக உள்ள இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உடனே அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Durai Vaiko wants to repeal three criminal laws against common people