"அரசியலுக்கு வருவீர்களா?" - மு.க அழகிரி மகனின் நெத்தியடி பதில்! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2011 ஆம் ஆண்டு மோசடி புகார் எழுந்த நிலையில் பல கிரானைட் குவாரிகள் மூடப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தியதில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. 

இந்த கிரானைட் முறைகேடு வழக்கு மதுரை மாவட்டம் மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து வழக்குகளும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நிறுவனமான ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் மீதும் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த நிறுவனம் மீது கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 273 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு துரை தயாநிதி மீது கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சுமார் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

துரை தயாநிதி மீதான வழக்கு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாடஷம் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் நவம்பர் 6ஆம் தேதிக்கு வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் என ஒத்தி வைத்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் துரை தயாநிதி ஆஜராகி வெளியேறிய போது செய்தியாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன்" என பதிலளித்தவாறு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DuraiDayanidhi answered question whether he would join politics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->