40-க்கும் மேற்பட்ட அணைகளை கட்டி இருக்கோம்! அண்ணாமலைக்கு துரைமுருகன் பதிலடி!
Duraimurugan response to annamalai allegation
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகள் கட்டினார் எனவும், ஆனால் 6வது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது என குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் அதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் அறிக்கை மூலம் விளக்கம் அளித்ததோடு அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதை இன்று (23.09.2032) வெளிவந்த இந்து தமிழ்த்திரை நாளிதழ் ஒரு செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
"தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணிகள் கட்டினார். ஆனால் ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகம் 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது" என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை அவர்கள் திமுக மீது சுமத்தி இருக்கிறார்.
நித்தம் நித்தம் இப்படிப்பட்ட உண்மைக்கும் மாறான செய்திகளை பேசி ஒன்றில் மாட்டிக் கொள்வதை நண்பர் அண்ணாமலை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த தவறான குற்றச்சாட்டு.
பெருந்தலைவர் காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் கழக ஆட்சியில் ஐந்து அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை அவர்கள் சொல்வது ஜமகாலத்தில் வடிகட்டிய பொய்.
நம்பியார் அணை பொய்கையாறு அணை கொடுமுடி ஆறு அணை ராமனதி அணை பாலாறு பெருந்தலாறு அணை இப்படி 40-க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக ஆட்சி.
ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. ஆனால் அவ்வாறு சொல்வதற்கு முன் சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். என்னுடைய நீண்ட கால அனுபவத்தில் நண்பர் அண்ணாமலைக்கு நான் சொல்கிற யோசனையாகும். இல்லாவிட்டால் அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வானமாகிவிடும்" தனது அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Duraimurugan response to annamalai allegation