ECR சம்பவம்: கட்சிக் கொடி இருந்தா அவர்கள் திமுகவினரா? அப்படிலாம் முடிவுக்கு வராதீங்க - திருமாவளவன் பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த காரை, திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த கும்பல் வழிமறித்து, காரில் பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய காணொலி வேகமாக பரவி வருகிறது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இதுவரை கைது செய்யும்  நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

குறிப்பாக அந்த பெண்கள் மது போதையில் இருந்ததாகவும், அவர்கள் தான் மோதிவிட்டு கரை நிறுத்தாமல் சென்றதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதனை முற்றிலுமாக மறுத்த பாதிக்கப்பட்ட பெண், காவல்துறைக்கு சந்தேகம் இருந்தால் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்க்கவும் அறிவுத்தினார்.

இந்நிலையில், சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் இளம் பெண்கள் வந்த காரை, திமுகவின் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் கும்பலாக துரத்திய சம்பவத்தில், காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் திமுகவினர் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் புது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECR incident DMK Car VCK Thirumavalavan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->