ரஷியா டிரோன் தாக்குதல்; உக்ரைனில் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கி 4 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 02 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது.

மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைனின் பெரிய நகரமாக சுமியில் இன்று ரஷியா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.  குறித்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு சேதம் ஆகியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 04 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து, அந்த குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில், ரஷிய டிரோன்கள் ஒரு மருத்துவமனை மற்றும் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை சேதப்படுத்தியதாக பிராந்தியத் தலைவர் ஓலே கிப்பர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். இதன் போது யாருக்கும் சேதம் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் 80க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியதாக விமானப்படை தெரிவித்துள்ளது, குறித்த 80க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இவை பொதுவான இரவு நேரத் தாக்குதல்கள் என்றும் பெரும்பாலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 killed in Ukraine apartment building after Russian drone strike


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->