அடுத்தடுத்து சிக்கும் விசிக நிர்வாகிகள்... சென்னையில் 2வது நாளாக ED ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனுக்கு சொந்தமான கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று 2ஆவது நாளாக ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நிறைவடைந்துள்ளது.

திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் என்ற மாநாட்டில் வெளியிடப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கைக்கான இணையதளத்தை வடிவமைத்துக் கொடுத்தது ஆதவ் அர்ஜுன் தலைமையிலான வாய்ஸ் ஆஃப் காமன் குழுவினர் தான்.

வாய்ஸ் ஆப் காமன் நிறுவனர் ஆதவ் அர்ஜுன் தன்னை ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தளம் மூலமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார். அந்த மாநாட்டின் மேடையிலேயே ஆதவ் அர்ஜுனை மேடையேற்றிய திருமாவளவன் பாராட்டினார்.‌

இந்த நிலையில் தான் கடந்த மாதம் 15ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஆதவ் அர்ஜுனுக்கு துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இத்தகைய சூழலில் நேற்று காலை முதல்  இவருடைய வீட்டில அமலாக்கத் துறை அதிகாரிகள் 2ஆவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைப்பெற்று வருவதாக‌ தகவல் வெளியாகி உள்ளது. போதைப்பொருள் கடிதத்தல் வழக்கில் விசிக நிர்வாகியும் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ed raid continue 2nd in Vck adhav Arjun related places


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->