பரபரப்பான அரசியல் சூழலில்... அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ED ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா ஊழல் முறைகேட்டில் சிக்கி உள்ள நிலையில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ள நிலையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ed raid on Aiadmk former minister vijayabaskar house


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->