ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி சகோதரர் வீட்டில் ED சோதனை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 

மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கொக்காடி கிராமத்தில் எம்பி நவாஸ் கனியின் அண்ணன் அன்சாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வந்துள்ளனர். 

அப்போ வீடு பூட்டி இருந்ததால் உடைப்பதற்கு அமைதி பெற அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையே ராமநாதபுரத்தில் உள்ள எஸ்.டி கொரியார் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போன்று தியாகராய நகர், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தியாகராய நகரில் உள்ள பசுல்லா சாலையில் அமைந்திருக்கும் சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ed raid on Ramanathapuram mp navaskani brother places


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->