முதல்வரின் முக்கிய வாக்குறுதி.! பிரச்சாரத்தில் வெளியான அறிவிப்பு.!
edappadi campaign in vikkiravandi
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் இறுதிக்குள், நிச்சயம் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தகுதி தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுத்து வருகின்றது. இந்நிலையில், அதிமுக மற்றும் திமுக எப்படியாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், விக்கிரவண்டி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி திறந்த வேனில் பல்வேறு இடங்களில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து, பிரசாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் வைத்த பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுத்த வண்ணம் இருந்தார். மேலும், அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள், இடிசம்பர் இறுதிக்குள் பதவி ஏற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
edappadi campaign in vikkiravandi