சுனில் கவாஸ்கர் மீது பி.சி.சி.ஐ.,யிடம் புகாரளித்த ரோகித் சர்மா; காரணம் இதுவா? - Seithipunal
Seithipunal


இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன் முறையாக இழந்தது. 

அடுத்ததாக, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. ரோகித் கேப்டன் பணியில் மட்டுமன்றி, பேட்டிங்கிலும் ஏற்றத்தை கொடுத்தார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த 3  டெஸ்டில் 31 ரன்கள் மட்டுமீ எடுத்திருந்தார். அந்நிலையில், கடைசி டெஸ்டில் தாமாக முன்வந்து போட்டியில் இருந்து விலகி கொண்டார். சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியிலும் ரோகித் பெரிதாக சோபிக்கவில்லை. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில்;
'' ரோகித்தின் பேட்டிங் மட்டுமன்றி, கேப்டன் திறமையும் குறைந்து விட்டது. இதனால் தான் சிட்னி டெஸ்டில் விலகினார். இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும்,'' என தெரிவித்தார்

இது குறித்து, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) கவாஸ்கர் மீது ரோகித் முறைப்படி புகார் அளித்துள்ளதாக இணையத்தில் சடெய்திகள் வெளியாகியுள்ளன.


 

அதில்,ரோகித் தரப்பில் ஒருவர் கூறுகையில், ' தன்னை கவாஸ்கர், இந்தளவுக்கு விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை,' என ரோகித் நினைத்தார். இதுபோன்ற விஷயங்கள் தனக்கு நெருக்கடி தந்தன. இதனால் பி.சி.சி.ஐ.,யிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது,' என்றார்.

ரசிகர் ஒருவர் கூறுகையில்,'' அனுபவத்தின் அடிப்படையில் கவாஸ்கர் விமர்சிக்கிறார். இதில் இருந்து ரோகித் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார். மற்றொருவர்,' கவாஸ்கர் எல்லை மீறி பேசுகிறார். 'அட்வைஸ்' செய்ய நினைத்தால் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும். இப்படி பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது,'' என்றார். இந்த விடயம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rohit Sharma complained to the BCCI about Gavaskar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->