ஒரு விவசாயியின் கஷ்டம் விவசாயிக்கு தான் தெரியும்… - இபிஎஸ் பெருமிதம்.!
Edappadi Palaniswami campaign
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோல் தேனி பங்களா மேடு பகுதியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தி திட்டங்களை தி.மு.க நிறுத்திவிட்டது. தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டம் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்பட்டது.
விவசாயிகள் விவசாயத்தை அரவணைத்து சென்றது அ.தி.மு.க ஆட்சியில் தான். 14 வருடங்களுக்கு பிறகு பதவிக்காக ஒருவர் வந்துள்ளார். அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என தெரிவித்த டிடிவி தினகரன் தற்போது அவர்களுடன் தான் கூட்டணியில் உள்ளார்.
நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி தான் பா.ஜ.க என தெரிவிப்பது டிடிவி தினகரன் தான். நானும் ஒரு விவசாயி. விவசாயியின் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக்கை நாம் கடவுள் போல வணங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami campaign