ஒன்று அல்ல... ஓராயிரம் வந்தாலும் தொட முடியாது... - இபிஎஸ் பரபரப்பு பேச்சு!   - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு செய்தார். 

அப்போது அவர், ஆரணி செய்யாறு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலும் விவசாயிகள், நெசவாளர்கள் நிறைந்துள்ளனர். 

தி.மு.க ஆட்சியில் இந்த தொழிலை முழுமையாக அளித்து விட்டார்கள். இந்த தொழிலில் புத்துணர்ச்சி பெரும் வகையில் வேட்பாளரை அறிவித்துள்ளோம். 

அதற்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் விவசாயிகள் நெசவாளர்களின் நம்பிக்கை சின்னமாக உள்ளது. 

புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க தான் வெற்றி பெறவும். ஒரு ஸ்டாலின் அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.கவை தொட்டு கூட பார்க்க முடியாது. 

நான் ஒரு விவசாயி வேளாண் உற்பத்தி குறித்து எனக்கு நன்றாக தெரியும். ரத்தத்தை வியர்வையாக சிந்தி எப்படி விவசாயி பாடுபடுகிறார்கள் என்று எனக்கு தெரியும். 

மத்திய ஆட்சியாளர்கள் சொல்லும் அமலாக்கத்துறை, வருமானத்துறை என எதற்கும் பயப்படாதவன் விவசாயி எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami campaign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->