மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்.. ஏக்நாத் ஷிண்டே நீக்கம்.! வெளியான அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா அரசியலில் கடந்த இரண்டு வாரமாக அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. இதனிடையே சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அசாமில் தாங்கினார். 

இதையடுத்து உத்தவ் தாக்கரே அரசை பெரும்பான்மையே நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார். அதன் பிறகு உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இதன் மூலமாக புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். துணை முதலமைச்சர் ஆக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார். வரும் 4 ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில்  ஏக்நாத் ஷிண்டே தனது பெரும்பான்மையே நிரூபிக்க உள்ளார். 

இந்நிலையில், சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்கி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டு உள்ளார் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eknath shinde removed for shiv sena party


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->