#Breaking :: திமுக அரசை கண்டித்து ஜன.2ல் ஆர்ப்பாட்டம்..!! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததை கண்டித்து அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "விவசாய பெருங்குடிமக்கள் இந்த விடியா ஆட்சியில் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து வரும் வேளையில் 2023ம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பரிசு தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு அரசின் சார்பில் செங்கரும்பை கொள்முதல் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் விவசாய மக்கள் செங்கரும்பை விளைவித்துள்ள நிலையில் தற்போது அரசின் அறிவிப்பால் விவசாய பெருங்குடி மக்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

பொதுமக்களும், விவசாய பெருங்குடி மக்களும் வேதனை அடைந்துள்ள நிலையில் விடியா திமுக அரசின் அமைச்சர் ஏ.வ வேலு அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்கள் வழங்கும்போது அதன் தரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்ததால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் இதுபோன்ற பொருட்கள் வழங்கப்படவில்லை என பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ள விடிய அரசை கண்டித்தும்; திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசாக மக்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டபடி தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5000 ரூபாய் வழங்க வலியுறுத்தியும்;

விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும் அதிமுகவின் விவசாய பிரிவு சார்பில் வருகின்ற 02/01/2023 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் திருவண்ணாமலை நகர அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS announced Protest against DMK govt on Jan 2


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->