முற்றிலும் பொய்.!! கனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவரே கிடையாது.!! உடைத்த பேசிய ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளராக இடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தான ஓபிஎஸ் மற்றும் நான்கு பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.அதன்படி உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக்கூட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கியதால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனக் கூறி ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உங்களை சம்மதப்படுத்தி பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி "அது தவறான விஷயம்.. நீங்கள் இதுபோன்று சொல்லவே கூடாது.. தொலைக்காட்சியில் இதுபோன்று கேட்பதே தப்பு. இது தவறான கேள்வி..  யாரோ ரோட்டில் போறவன் சொல்வதை வைத்து கேள்வி கேட்கலாமா.? 

இதுபோன்று தகவலை ஒளிபரப்புவதோ, பத்திரிகையில் செய்தி வெளியிடுவதோ தவறானது. யாரோ ரோட்டில் பேசுவதை சரியா தவறா என நீங்கள் பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கும் போது பல சம்பவங்கள் நடைபெறும். அதனை சட்டரீதியாக அரசு அணுகி நடவடிக்கை எடுத்துள்ளது. 

வேண்டும் என்றே இன்றைய ஆட்சியாளர்கள் இதனை திரித்து அவர்களுக்கு சாதகமாக சூழ்ச்சி செய்வது ஒருபோதும் நடக்காது. சட்டத்தின் ஆட்சியை அண்ணா திமுக நடத்தியது. இது குறித்து நான் பலமுறை விளக்கம் அளித்து விட்டேன். ரோட்டில் போற வரவன் எப்படிப்பட்டவன்.? ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவன். 

இன்றைய ஆட்சியாளர்கள் அவரை பலமுறை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 3 மாதம் சிறையில் அடைத்தனர். நேற்று பேட்டி கொடுத்தவர் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். 

கனகராஜை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் உங்கள் மீது வழக்கு தொடர்வேன். அவர் ஜெயலலிதா அவர்களுக்கு கார் டிரைவர் அல்ல, திருமதி சசிகலாவுக்கு தான் அவர் கார் டிரைவர். ஒரு நாள் கூட அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஓட்டுனராக இருந்தது கிடையாது.

தவறான தகவலை பத்திரிகைகளும் ஊடகங்களும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இனி இது போன்ற செய்தி வெளியானால் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். ஜெயலலிதா அவர்களின் புகழுக்கு இழுக்கு ஏற்படும் விதமாக இது அமைந்துள்ளது. எனவே அவர் ஜெயலலிதா அவர்களுக்கான ஓட்டுனர் அல்ல. ஒரு குற்றவாளியை முன்னாள் முதலமைச்சருக்கு கார் ஓட்டுனராக இருந்தார் எனக் கூறுவது முற்றிலும் தவறானது" என செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS said that Kanagaraj is not Jayalalithaa car driver


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->