#BigBreaking || கூடவே இருந்து ஓபிஎஸ்க்கு உலை வைத்த வைத்தியலிங்கம்... சரியான பாயிண்ட்டை பிடித்து... எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயகுமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நத்தம் விஸ்வநாதன் தெரிவிக்கையில்,

"அதிமுகவின் அனைத்து அதிகாரங்களையும் படைத்த பொதுச் செயலாளர் பதவியில் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், தமிழகத்தின் உடைய எதிர்க்கட்சித் தலைவர், அருமை அண்ணன் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுக்குழு மூலமாக தேர்வு செய்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் சொல்லி இருக்கிறார். அவர் தனக்கும், தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தவறான ஒரு தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இந்த பொதுக்குழு சட்டப்படி நடைபெறும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகின்ற பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

அதே போல அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் 'நான்தான் இன்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறேன்' என்று சொல்கிறார். ஆனால், அவருடன் இருக்கின்ற வைத்திலிங்கம் அதற்கு மாறாக, 'இப்போது இரட்டை தலைமை சர்ச்சை இருப்பதால், அடுத்த நிலையில் உள்ள பொருளாளருக்கு தான் அந்த அதிகாரம்' என்று சொல்கிறார்.

ஆனால் இரட்டை தலைமையில் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்கிறார். இவர்களுக்குள்ளாகவே ஒற்றைக் கருத்து என்பது இல்லை.

ஆக ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்பதையும் வைத்தியலிங்கம் ஒத்துக் கொள்கிறார். இந்த சூழ்நிலையில், இப்போது ஒருங்கிணைப்பாளர் பதவியும் இல்லை, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் இல்லை, துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் இல்லை. இப்போது இருக்கின்ற பதவிகள் தலைமை கழக நிர்வாகிகள் மட்டும்தான் இருக்கின்றார்கள்" என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
 

வைத்தியலிங்கம் பேசியது என்ன? விவரம் :


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps side press meet for ops side vaithiyalingam speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->