வட மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம்.!! ஸ்டாலினை எச்சரிக்கும் ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அடிக்கல் நாட்டு நிகழ்வில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இந்த புதிய தடுப்பணை ஆந்திராவின் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படுகிறது. ஆந்திர மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு அதிமுக‌ பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடும்‌ கண்டனம் தெரிவித்ததோடு தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‌ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டவுள்ள ஆந்திர மாநில அரசுக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வருக்கும் எனது கடும் கண்டனங்கள்.

சர்வதேச நதிநீர் பங்கீடு கொள்கையின்படி நதியின் கீழ்ப் பகுதியில் இருக்கும் மாநிலங்களுக்கே நதிநீரின் பங்கீட்டில் அதிக உரிமை உள்ளது. 222 கிலோமீட்டர் தூரம் தமிழ்நாட்டில் செல்லும் பாலாற்று நீரை, வெறும் 33 கிலோமீட்டர்களுக்கு பாலாறு நீர்வழியைக் கொண்டிருக்கும் ஆந்திர மாநிலம் ஏற்கனவே 22 தடுப்பணைகள் கொண்டு தடுத்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டுவது அனுமதிக்க இயலாத செயலாகும். 

இதனை உரிமையோடு நின்று குரல் கொடுத்து தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்த விடியா திமுக ஆட்சியில் மேகதாது விவகாரத்தில் மவுனியாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருப்பது கண்டனத்திற்குறியது. 

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வடமாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்கு பெரும் பங்கு வகிக்கும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் செயலை உரிய சட்ட நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழர் உரிமை மீட்போம் ! தமிழ்நாடு காப்போம்! என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS warn mkStalin in Andhra palar dam construction


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->