#BigBreaking | ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெருக்கமானவர்கள் செய்த சம்பவம்?! ஆணையத்திற்கு பறந்த புகார்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி, அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு 4000 ரூபாய் திமுக கூட்டணி கட்சியினர் விநியோகம் செய்வதாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி 27 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு திமுக கூட்டணி கட்சியினர் 4000 ரூபாய் விநியோகம் செய்வதாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெருக்கமானவர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடாவில் ஈடுபட்டு வருவதாக, அதிமுகவின் இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகாரையும் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இன்பதுரை புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே, ஈரோடு அசோகபுரத்தில் வாக்குச்சாவடி எண் 138 மற்றும் 139 வாக்குச்சாவடிகளில் திமுகவினர் கட்சி கொடி கட்சிக்கொடியுடன் நிற்பதாக, அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

180 வது வார்டில் ஆதார் அடையாள அட்டையுடன் சென்றால் வாக்களிக்க அனுமதி மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இது குறித்து மின்னஞ்சல் மூலம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பத்துரை புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election 2023 AIADMK Complaint Ashok Nagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->