ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடுமா? அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பெட்டியில், "தற்போது தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான  இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அவர் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றார்.

இப்போது நிலைமை மாறி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் திமுக அரசை விரட்ட வேண்டும் என்ற முடிவில் உள்ளனர். மேலும் இந்த விடியாத அரசருக்கு பாடம் புகட்ட காத்திருக்கின்றனர்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், வேட்பாளரின் விண்ணப்பத்தில் கையெழுத்திடுவது யார்? இப்போது வரை தேர்தல் ஆணையத்தில் பிரச்சனை உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், "அதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அனைத்துக்கும் ஒரு முடிவு உள்ளது. நிச்சயமாக ஒரு நல்ல முடிவாக அது அமையும். இப்போதைக்கு இது மட்டும் தான் என்னுடைய கருத்தாக நான் தெரிவிக்க முடியும்.

இந்த இடைத்தேர்தலை பொருத்தவரை ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணி கட்சிக்கு மீண்டும் ஒதுக்குவதா? அல்லது இல்லை நாங்களே போட்டியிடலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்து, தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்" என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode east By Election ADMK EPS Side


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->