ஈரோடு கிழக்கு தொகுதி: வாக்குப்பதிவு நிறைவு!
Erode east By Poll 2025
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் களமிறங்காத நிலையில், தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கியது. தொகுதி முழுவதும் வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
காலை 9 மணி நிலவரப்படி 10.85% வாக்குகள் பதிவாகியிருந்தது.
காலை 11 மணிக்கு 26.03% வாக்குகள் பதிவாகியிருந்தது.
பிற்பகல் 1 மணிக்கு 42.41% வாக்குகள் பதிவாகியிருந்தது.
மாலை 3 மணிக்கு 53.63% வாக்குகள் பதிவாகியிருந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
இருப்பினும் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.