'கூவம் நதியை லண்டனாக்க போறோம்' திமுக அமைச்சர் பேட்டி.!
EV VELU ABOUT KOOVAM NATHI IN CHENNAI
சென்னை கூவம் நதி லண்டனுக்கு இணையாக மாற்றப்படும் என்று திமுக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து இருக்கிறார்.
சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூரில் மழைக்கால வெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இந்த தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
![சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.. அமைச்சர் எ வ வேலு தகவல்.!! - Seithipunal](https://img.seithipunal.com/large/large_ukvh-113764.jpg)
இந்த நிலையில் இதை பார்வையிட அமைச்சர் எ.வ.வேலு வந்தார். அவருடன் ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்த உடன் லண்டனுக்கு இணையாக சென்னை கூவம் நதி சீர் செய்யப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
EV VELU ABOUT KOOVAM NATHI IN CHENNAI