தேர்தல் களத்தில் பரபரப்பு : ஜார்கண்ட்டில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்?
Excitement in the election field congress to take power in jharkhand
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு நடப்பு மாதம் நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில்,
கடந்த 20-ம் தேதி மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
இந்த தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், 20-ம் தேதி பதிவான வாக்குகள் வாக்குச்சாவடிகளில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இதில், காங்கிரஸ் கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகள் தேவை. முன்னதாக பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
அந்த வகையில், காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், பா.ஜ.க கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கும் நிலையில், சுயேட்சை மற்றும் இதர கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
English Summary
Excitement in the election field congress to take power in jharkhand