தலைமைச் செயலாளர் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நேரில் சந்திப்பு!
Face to face meeting with Chief Secretary Governor RN Ravi
புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் முருகானந்தம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துள்ளார்.
வருகிற 27-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சராக இருக்கும் மெய்யநாதன் அல்லது சி.வி.கணேசன் இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள முருகானந்தம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார்.
English Summary
Face to face meeting with Chief Secretary Governor RN Ravi