கோமியத்தில் உரம், பூச்சுக்கொல்லி - அடுத்தடுத்து கலக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம்.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெல், பசுவின் கோமியத்தில் இருந்து பூச்சுக்கொல்லிகள் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பசுவின் கோமியம் லிட்டர் ரூ.4-க்கு வாங்கிக் கொள்ளப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் கோதான் நியாய் திட்டத்தின் கீழ் பசுவினுடைய சாணம் கிலோ ரூ.2-க்கு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பசுவின் கோமியத்தில் இருந்து பூச்சுக்கொல்லிகள் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் பசுவின் கோமியம் லிட்டர் ரூ.4-க்கு பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளதாவது,

"கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட கோதான் நியாய் திட்டத்தின்  மூலம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக பசுவின் சாணத்தினை விற்றவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் வளர்ச்சியினால் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். நீங்கள் ஏழையாக இருங்கள் அல்லது பணக்காராக இருங்கள். யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fertilizer coating killer in Gomiyam Congress led government


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->