ஜாமீன் கோரி முன்னாள் முதல்வர் மேல்முறையீடு.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி 31ம் தேதி  ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கடந்த மே‌ 3ம் தேதி ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் பிணை கேட்டு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து  ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை முதல் ஜார்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் தனிச்செயலாளர் வீட்டில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் ரொக்க பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது ஹேமந்த் சோரனின் ஜாமீன் வழக்கிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former jharkhand CM Hemant Soren reappeal for bail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->