டாஸ்மாக்கில் புதியதாக கரூர் சரக்கு வந்துள்ளது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்!
Former Minister Rajendra Balaji informed that Karur liquor has arrived in Tasmac
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஆட்சி திமுக ஆட்சி! எல்லாமும் விலைவாசி ஏறிவிட்டது! நிம்மதியாக குடிக்கவும் முடியவில்லை!
அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து பொதுக்கூட்டமானது நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. அனைத்தும் பொருட்களும் விலை ஏறிவிட்டது என குற்றம் சாட்டினார்.
மேலும் பேசுகையில் திமுக ஆட்சியில் நிம்மதி இல்லை என்று டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்கினால் அங்கேயும் நிம்மதியாக விடவில்லை.
கவர்மெண்ட் சரக்கு வேண்டுமா கரூர் சரக்கு வேண்டுமா என்று கேட்கின்றனர். கவர்மெண்ட் சரக்கு என்ன விலை என கேட்டேன் விலைப்பட்டியலை விட 200 ரூபாய் அதிகம் கரூர் சரக்கு விலை பட்டியலை விட 500 ரூபாய் அதிகம் என்றனர். கவர்மெண்ட் சரக்கு போதை கம்மியாக இருக்கும் கரூர் சரக்கு போதை அதிகமா இருக்கும்.
கவர்மெண்ட் சரக்கு தெரியும் அது என்ன கரூர் சரக்கு என கேட்டால் அது மந்திரியின் சரக்கு. அந்த மந்திரி சரக்கிற்கு கரூர் சரக்கு என தனியாக பெயரை வைத்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர் பாணியில் பேசியுள்ளார்.
English Summary
Former Minister Rajendra Balaji informed that Karur liquor has arrived in Tasmac