திரைப்படமாகும் முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு; இந்திய தொழிநுட்ப கலைஞர்களுடன் ஆலோசனை..?
The film is a biography of former Sri Lankan President Mahinda Rajapaksa
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘Thawthisa Pictures’ என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மொஹான் பெரேரா என்பவர் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மஹிந்தவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பணிபுரிய இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த திரைப்படம் மகிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தையும், இலங்கையின் போர்க்கால நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்த மூலத் திரைக்கதை பிரதி இலங்கையின் முன்னாள் அதிபர் (ஜனாதிபதி) மகிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த திரைப்படம் குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்பட உருவாக்கம் தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The film is a biography of former Sri Lankan President Mahinda Rajapaksa