பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த பிரபல நடிகை..எதற்காக தெரியுமா?
Popular actress rejects blockbuster film Do you know why?
இந்த படத்தில் லிப்லாக் காட்சிகள் இருக்கும் என்றுஎனக்கு அத்தகைய காட்சிகளில் நடிப்பது அசவுகரியமாக இருக்கும் என்று கூறி அந்த கதாபாத்திரத்தை நிராகரித்தேன்' என்று பிரபல நடிகை ஷிவானி ராஜசேகர் கூறினார்.
புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான படம் 'உப்பெனா'.இந்தப் படத்தில் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இதையடுத்து இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்துக்குப் பிறகு கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராகி விட்டார்.
இருந்தபோதும், இந்த பிளாக்பஸ்டர் படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஷிவானி ராஜசேகர். இவர் இப்படத்தில் லிப்லாக் காட்சிகள் இருந்ததால் நிராகரித்திருக்கிறார் என தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பின்னர் அந்த கதாபாத்திரம் கீர்த்தி ஷெட்டிக்கு சென்றது.

தற்போது இதனை நினைவு கூர்ந்த ஷிவானி, ''இந்த படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு நெருக்கமான மற்றும் லிப்லாக் காட்சிகள் இருக்கும் என்று இயக்குனர் புச்சி பாபு சனா என்னிடம் கூறினார். ஆனால், எனக்கு அத்தகைய காட்சிகளில் நடிப்பது அசவுகரியமாக இருக்கும் என்று கூறி அந்த கதாபாத்திரத்தை நிராகரித்தேன்' என்று கூறினார்.
English Summary
Popular actress rejects blockbuster film Do you know why?