சிகரெட் பிடிக்கும் ஜோதிகா! இதெல்லாம் சிவகுமார் பார்த்தா என்ன ஆகும்?!
Actress Jothika Smoking
நடிகை ஜோதிகா, டப்பா கார்டெல் என்ற இணையத் தொடரில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ள நடிகை ஜோதிகா, மலையாளத்தில் மம்மூட்டியுடன் காதல் தி கோர் படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.
தற்போது பாலிவுட் சினிமா மற்றும் இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் நடித்த டப்பா கார்டெல் இணையத் தொடர் நெட்பிளிக்ஸில் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானது. டப்பா கார்டெல் தொடரில் ஜோதிகாவின் நடிப்பு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்த தொடரின் ஒரு கட்சியில் ஜோதிகா புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்று இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேநீர் கூட குடிக்காமல் ஒழுக்கத்துடன் வாழும் நடிகர் சிவகுமார், தனது மருமகள் புகைபிடிக்கும் இந்த காட்சியை பார்த்தால் என்ன சொல்வாரோ? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.