அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால், பாஜக தன் பலத்தை மாநிலங்களவையில் கூட்டிக் கொண்டது...!!! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மேல்சபையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க, கூட்டணி அமைத்ததன் மூலம் பா.ஜ.க கட்சியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.டெல்லி மேல்சபையின் மொத்த எண்ணிக்கை 245 என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் 9 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் தற்போதைய எண்ணிக்கை 236-ஆக உள்ளது. இதில் பெரும்பான்மை பெற 119 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. இதில் கூட்டணிகள் பலத்துடன் அந்த எண்ணிக்கையை பா.ஜ.க. கைவசம் வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது பா.ஜ.க. அணியில் அ.தி.மு.க. இணைந்துள்ளதால் அந்த கட்சியில் மேல்சபையில் உறுப்பினர்களாக இருக்கும் சந்திரசேகரன், தம்பித்துரை, சி.வி.சண்முகம், தர்மர் ஆகிய 4 எம்.பி.க்கள் ஆதரவு பா.ஜ.கவுக்கு கிடைத்துள்ளது.

இதன் மூலம் பா.ஜ.கவின் பலம் 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பா.ம.க.வை சேர்ந்த அன்பு மாரியின் பதவிக்காலம் வருகிற ஜூலையில் முடிகிற நிலையில் மீண்டும் அவர் மேல்சபை எம்.பி.யாக வந்தால் பா.ஜ.க. பலம் 124 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி,ஆந்திரா, ஜம்மு-காஷ்மீரில் காலியாக இருக்கும் இடங்களுக்கான தேர்தல் முடியும் போது பா.ஜ.க. கூட்டணியின் பலம் 141 ஆக உயரலாம் என்று பா.ஜ.க. கணக்கு போட்டுள்ளது.

இதன் மூலம் மேல் சபையிலும் மசோதாக்களை நிறைவேற்ற போதுமான எண்ணிக்கையை பெற முடியும்.இதனால் என்ன தெரிகிறதென்றால் பா.ஜ.க.கட்சியின் வருங்கால ஆட்சி அமோகமாக இருக்கப்போகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

forming alliance with AIADMK BJP increased strength Rajya Sabha


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->