ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்களின் வேலை பறிப்பு., துரத்தப்படும் ஊழியர்கள் கண்ணீருடன் வீதியில்.! - Seithipunal
Seithipunal


ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு எதிராக போராடியதற்காக, விடுதியில் இருந்து வெளியேற சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர் என்று, அந்நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் கண்ணீருடன் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் செயல்பட்டுவரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் விடுதியில் தங்க தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை அந்த விடுதியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் நச்சு ஏற்பட்டதன் காரணமாக, 200க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவவே, சக ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில், ஒரு வாரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அந்த நிறுவனத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அதிலும், பெண் ஊழியர்களின் உடைமைகள் ஒன்று கூட விடுதியில் இருக்க கூடாது, அனைத்தையும் எடுத்து செல்லுங்கள், ஒருவாரம் கழித்து நிறுவனம் திறக்கும் போது வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்று விடுதி நிர்வாகம் சொல்லி, கட்டாயமாக வெளியில் துரத்துவதாக பெண் தொழிலார்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிர்வாகத்தின் இந்த செயல் அவர்களை பணியில் இருந்து துரத்திவிடுவதுபோல் உள்ளதாக கண்ணீர் மல்க குற்றம் சாட்டுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foxconn staff cry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->