வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் ரத்து! - அஸ்ஸாம் பாஜக அரசுக்கு கூட்டணி கட்சிகள் ஜேடியூ, எல்ஜேபி எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


1937-ம் ஆண்டு  காலணித்துவ ஆட்சிக்காலத்தின்போது, அசாம் மாநிலத்தில், முஸ்லிம் லீக் அரசாங்கத்தின்கீழ் மாநில சட்டசபையில் வெள்ளிக்கிழமை நாட்களில் தொழுகைக்கு 2 மணி நேரம் இடைவேளை விடும் வழக்கம் கொண்டு வரப்பட்டது.  

கடந்த 87 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த வழக்கம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அசாம் சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் பிஸ்வஜித் அறிவித்துள்ளார்.

மேலும், வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் இடைவேளை விடப்படுவதால், முக்கிய விவாதங்களை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


இது தொடர்பாக பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூவின் மூத்த தலைவர் நீரஜ் குமார் கூறுகையில், அஸ்ஸாம் அரசின் இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், இந்தியர் ஒவ்வொருவருக்கும் மத நம்பிக்கை, மரபுகளைப் பாதுகாக்கும் உரிமை இருக்கிறது என்று கூறியுள்ளார். 

இதே போல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், வெறுப்பைப் பரப்புகிற நடவடிக்கைதான் இது. மோடி- அமித்ஷாவிடம் நல்ல பெயரை பெறுவதற்காக அஸ்ஸாம் முதல்வர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். 


அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, நச்சைக் கக்கும் வகையில் பேசுவதாக சமாஜ்வாதி கட்சி சாடியுள்ளது. அத்துடன் முஸ்லிம்களை சித்ரவதை செய்வதில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு இடையே பெரிய போட்டி நிலவுகிறது என்றும் சமாஜ்வாதி கட்சி சாடியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Friday prayer time canceled Allies JDU LJP oppose Assam BJP government


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->