கடும் கோபம்!!!பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்ளவில்லை என்றால் அவமரியாதையை சந்திப்பார்!!! EPS க்கு OPS - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம், "ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. கோவிலாக கருதும் அ.தி.மு.க. அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைக்க முடியாது.

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருக்கவே தகுதியற்றவர். பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியமில்லை.ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் இருந்து பிரிந்தது பிரிந்ததுதான். அ.தி.மு.க.வை ஒருபோதும் எதிரிகளிடம் அடமானம் வைக்கமாட்டோம்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:

இதைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, "தமிழகத்தில் அ.தி.மு.க. எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லை என்றால் அவமரியாதையை சந்திப்பார்.

ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று, ஆள் வைத்து பேசினார்கள். ஆனால் இதுவரை நடந்த ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை" எனத் தெரிவித்தார்.இது தற்போது அரசியல்வாதிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

General Secretary does not step down from his post he will face disrespect OPS to EPS


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->