வெளியானது அஜித்தின் "காட் பிளஸ் யூ" பாடல்.!!
good bad ugly movie god bless u song released
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தத் திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் டீசர், இதுவரைக்கும் வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது. சமீபத்தில் இந்தப்படத்தின் முதல் பாடலான 'ஓஜி சம்பவம்' பாடல் வெளியாகி வைரலானது.
அதன் பின்னர் 2-வது பாடலான 'காட் பிளஸ் யூ' இன்று வெளியாகும் என்று நேற்று புரோமோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 'காட் பிளஸ் யூ' பாடல் வெளியாகி இருக்கிறது.
English Summary
good bad ugly movie god bless u song released