எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்க!...அதிமுக, திமுக கலைச்சி விட்டுரும்!...விஜய்-க்கு திருமா வைத்த ஓபன் கோரிக்கை!
Give me the post of deputy chief minister aiadmk dmk will quit thiruma open request to vijay
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் பேசிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாவது, விசிக, தவெக-வுடன் இணைவது என்றால் அதை தாங்கள் தான் சொல்ல வேண்டும் என்றும், நாங்கள் உங்களுடன் வருவது என்றால் எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்க. 4 பேருக்கு நல்ல அதிகாரம் உள்ள பதவி கொடுங்க என்று நாங்கள் கேட்கும் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்து பின்னர் அறிவித்தால் வெற்றிக்கரமாக நடத்த முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும், விஜய் பூஜ்ஜியத்தில் இருந்து தான் தொடங்கணும் என்றும், அவர் இன்னும் களத்தில் வரலை என்று கூறியுள்ள அவர், ஓபன் அஜண்டாவை சட்டசபை தேர்தலுக்கு முன் சொல்லும் போது, 75 வருட அரசிய களத்தில் அனுபவம் பெற்ற அதிமுக, திமுகவும் எப்படி டீல் பண்ணும், கலைச்சி விடணும் என்று நினைக்கும் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா என்று கூறியுள்ளார்.
English Summary
Give me the post of deputy chief minister aiadmk dmk will quit thiruma open request to vijay