பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் ஜி.கே. வாசன் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


சென்னை தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 மதுபாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, வினோத் என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே கைது செய்யப்பட்ட வினோத், பெட்ரோல் குண்டு வீசியது குறித்து காவல்துறையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியது யாராக  இருந்தாலும் தமிழக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்  என தெரிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து, சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகம் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியிருப்பது கண்டிக்கதக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நள்ளிரவு பா.ஜ.க தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியிருப்பது கண்டிக்கதக்கது . 

இது சம்பந்தமாக காவல்துறை ஒருவரை கைது செய்து இருக்கிறது . மேலும் இச்செயலில் ஈடுப்பட்டு இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க , நடவடிக்கை எடுக்க வேண்டும் . 
இச்செயல் மேலும் தொடராமல் இருப்பதற்கு பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan says about kamalakayam bomb blast


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->