பாஜவினருக்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்துக்கள் - தாமக ஜி.கே.வாசன் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


குஜராத் சட்டமன்ற பொது தேர்தலில் முடிவுகள் வெளியாகி உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

தொடர்ந்து 7வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சி அமைப்பதால் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் குஜராத் மாநிலத்தின் வெற்றியை பாஜக தொண்டர்கள் நேற்று கொண்டாடினர்.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் 'குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 7 வது முறையாக வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சிக்கும், அதற்கு அடிப்படைக்காரணமாக விளங்கிய முன்னாள் முதல்வர், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்." என் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan wishes to Narendra Modi for Gujarat Assembly Election Results


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->